News Just In

2/02/2025 11:23:00 AM

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்!

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்



தமிழரசுக் கட்சியின், மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவிட்டபுரம் பகுதியில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக மாவை சேனாதிராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது சமய கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.

இதன்போது, உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பெருமளவான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு மாவை சேனாதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், குகதாசன், சிறீநேசன், ஜீவன் தொண்டமான், மனோ கணேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட பலர் தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன், மாவை தொடர்பான தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்

No comments: