சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் வைத்து இந்த தெரிவு இடம்பெற்றது.
சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.வை. அன்வர் ஸியாத் அவர்களும், பொருளாளராக சட்டத்தரணி எம்.எம்.எஃப். ஷாமிலா அவர்களும் உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நஸீல் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வித போட்டிகளுமின்றி ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்தபா அவர்கள் கிழக்கின் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வாதாடும் திறமை கொண்டவர் என்பதுடன் கடந்த காலங்களிலும் சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும், பிராந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டு சட்டத்தரணிகளின் நலன்சார் விடயங்களிலும், சம்மாந்துறை நீதிமன்றம் உருவாகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments: