News Just In

2/27/2025 03:47:00 PM

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !

மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா !


நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நிகழ்வுகள் பாடசாலை அதிபர் எம்.ஐ. அஸ்மி தலைமையில் (26) புதன்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹிதுல் நஜீம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் ஓய்வு பெற்ற அதிபர் சட்டத்தரணி ஏ. ஆதம்பாவா, கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான கற்றல் வள நிலையம் (நூலகம்) மற்றும் 2024ம் ஆண்டு 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு, அண்மையில் ஆசிரிய சேவையில் இருந்து இளைப்பாறிய எஸ்.எம்.ஸஹாபி மற்றும் திருமதி சபீனா ஆகியவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா என்பன இதன்போது இடம்பெற்றன.

மாணவர்களுக்கான நினைவுச் சின்னங்களையும், பரிசில்களையும் நூலகத்திற்கான 32"அங்குல LED தொலைக்காட்சியையும் சாய்ந்தமருது சிங்க ஷோ ரூம் நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம். ஜிப்ரி அன்பளிப்பாக வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: