News Just In

2/27/2025 10:06:00 AM

இன்று வைத்தியசாலைகளுக்கு முன் நடைபெற உள்ள போராட்டம்!

இன்று வைத்தியசாலைகளுக்கு முன்நடைபெற  உள்ள போராட்டம்


நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டமானது இன்று வியாழக்கிழமை (27) நண்பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளதாக சங்கத்தின் உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டம் வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்காது என்றும் நாலக ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி தாதியர்கள் போராட்டத்தில் குதிக்க தீர்மானித்துள்ளனர்.

தமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்க வேண்டும் எனவும் தாதியர் சங்கங்கள் கோரியுள்ளன.

தமது பல்வேறு கொடுப்பனவு முறைகளும், மேலதிக நேரத்துக்கான கொடுப்பனவு முறைகளும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை உடனடியாக அரசாங்கம் திருத்தியமைக்க வேண்டும் என்றும் தாதியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

No comments: