News Just In

2/22/2025 09:52:00 AM

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை : சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள்!

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டில் தமிழர் படுகொலை : சுட்டுக் கொல்லப்பட்ட துப்பாக்கிதாரிகள்


கொழும்பு  - கொட்டாஞ்சேனைபகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் இருவர் காவல்துறையினரால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கொட்டாஞ்சேனை  பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் தலவாக்கலையை சேர்ந்த சசிகுமார் எனும் நபர் உயிரிழந்தார்.

இதையடுத்து, துப்பாக்கி சூட்டு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற துப்பாக்கிதாரிகளை கொழும்பு ஒருகொடவத்த பகுதியில் வைத்து அவர் கிரான்பாஸ் காவல்துறையினர் கைது செய்தனர்.

இ ந்தநிலையில், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்ட காவல்துறையினர் துப்பாக்கிதாரிகளை அழைத்துச் சென்றபோது, ​​துப்பாக்கிதாரிகள் காவல்துறையினரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களைச் சுட முயன்ற போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: