News Just In

1/26/2025 10:10:00 AM

உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு!

உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

உணவு உரிமைகள், உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீட்டு அறிக்கை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

உணவு உரிமைகள், உணவுப் பாதுகாப்பு குறித்த அடிப்படை மதிப்பீடு பியன் (FIAN) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட 10 மாவட்டங்களில் வீட்டு உணவுப் பாதுகாப்பின்மை, உணவு முறைமைகளை 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆறுமாத காலம் மேற்கொண்ட மதிப்பீட்டு அறிக்கையே கையளிக்கப்பட்டுள்ளது.

போஷாக்குத் தொடர்பாக 1500 இற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கள் பெறப்பட்டு விவரங்களை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறந்த உணவு அணுகலை மக்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைக் குறைப்பதற்கும், சமமான உணவு முறைகளை நிறுவுவதற்கும் இந்த ஆய்வு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை கையளிக்கும் நிகழ்வில் பியன் நிறுவன உணவு தொழில்நுட்ப நிபுணர் எம். மொஹமட் பஸ்லி, கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர் அமுதினி சுகிர்தன் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: