(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கும் Smart Sri Lanka தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் வழங்கப்பட்டு வரும் இலவச கணினிப் பயிற்சி நெறியை நிறைவுசெய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
இதுவரை Computer Application Assistant Course கணினி இலவச பயிற்சி நெறியை நிறைவு செய்துள்ளவர்கள் மட்டக்களப்பு மாவட்டச் செலயலாளர் ஜஸ்டினா ஜுலேகாவிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
இக்கற்கைநெறியின் இணைப்பாளராகவும் வளவாளராகவும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம். பாஸில், தொழில் வழிகாட்டல் தலைமைத்துவ பயிற்சியாளராக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. கருணாகரன் ஆகியோர் பணியாற்றினர்.
No comments: