News Just In

1/19/2025 02:58:00 PM

தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் ஆலோசகர் சபைக் கூட்டமும் கலந்துரையாடலும்!

தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் ஆலோசகர் சபைக் கூட்டமும் கலந்துரையாடலும்



(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை அண்டி அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையின் ஆலோசகர் சபைக் கூட்டமும் கலந்துரையாடலும் அதன் நம்பிக்கையாளர் சபை பிரதம அறங்காவலர் எஸ்.சி.சி. இளங்கோவன் தலைமையில் தந்தை செல்வா கலையரங்கில் சனிக்கிழமையன்று 18.01.2025 இடம்பெற்றது.

தந்தை செல்வா அறக்கட்டளையின் நம்பிக்கையாளர் சபை செயற்பாட்டாளர் எஸ். திலீபனின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அறங்காவலர் ஆர். பேரின்பநாயகம், அறங்காவலர் ஆர். செல்வின், அம்பாறையிலிருந்து ஆலோசகர் கே. நிர்மலரூபன், மட்டக்களப்பிலிருந்து ஏ.எச்.ஏ.ஹுஸைன் உட்பட இன்னும் அதன் அறங்காவலர் உறுப்பினர்களும் அங்கத்தவர்களும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கலந்துரையாடல் நிகழ்வில் தந்தை செல்வா கலையரங்க அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக சேவைச் செயற்பாடுகள், அதன் எதிர்காலச் செயற் திட்டங்கள் குறித்து விவரம் தெரிவிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.

தந்தை செல்வா அறக்கட்டளை மூலம் அறிவுசார் கல்வி, சமாதானம், பாதிக்கப்பட்ட மக்களின் கலை கலாசார பண்பாட்டு மீட்சி, சமாதான எண்ணக்கருக்களை விதைத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகம் தொடர்ந்தும் இத்தகைய சமூக அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக சமாதான எண்ணக்கரு குறித்து தனிமனித செயற்பாடும் அடுத்த தலைமுறையினருக்கு சமாதானத்தை நோக்கிய அகன்ற பார்வையைக் கொண்டு சேர்ப்பித்தலும் இடம்பெறவேண்டும். இந்த செயற் திட்டத்திற்கு அர்ப்பணிப்பதாக அறக்கட்டளையின் எதிர்கால செயற்பாடுகள் முனைப்புப் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கத்தின் முன்னேற்றங்கள் பற்றிய விவரணத்தை அவ் அறக்கட்டளையின் அலுவலர் எஸ். கமல், கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கையை N;ஜ. டிலோஜினி, கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வுக் கலையரங்கத்தின் செயற்பாடுகள்பற்றி எஸ். திலீபன் எம். யாழினி ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்

தந்தை செல்வா கலையரங்கு தந்தை செல்வா அவர்களின் நினைவாகவும் யுத்தத்திலிருந்து மீண்டெழும் தமிழ் பேசும் மக்களின் வல்லமையின் எடுத்துக் காட்டாகவும் தந்தை செல்வா அறக்கட்டளையின் தாராள பங்களிப்புடனும் 01.07.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.

அன்று தொடக்கம் இன்றுவரை தந்தை செல்வா அறக்கட்ளை பல்லின சகவாழ்வு, சமாதான நடவடிக்கைகளுக்காக இயங்கி வருகின்றது.

No comments: