News Just In

1/19/2025 02:54:00 PM

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கல்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கல்




(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு கற்கைகளை நிறைவு செய்து சித்திடையந்த 89 பேர் தங்களுக்கான தகைமைச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கிழக்குப் பல்கலைகழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் விரிவாக்கல் கற்றல்கள் நிலையத்தினால் நடாத்தப்பட்ட டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றபோது கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கத்திடமிருந்து இந்த சான்றிதழ்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.

வெளிவாரிப் பட்டப்படிப்புகள் விரிவாக்கல் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எஸ். ஜெயராசா தலைமையில் நிகழ்வு சனிக்கிழமை 18.01.2025 கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பப் பூங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விவசாய கற்கையில்; 60 பேரும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் 16 பேரும் பன்மைத்துவமும் உள்ளடக்கிய சேவை வழங்கல் மூலமும் அமைதியை நிலைநிறுத்துவதற்கான மேம்பட்ட கற்றலுக்கான பாட நெறியில் 09 பேரும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப கற்கையில் 04 பேரும் தங்களுக்கான டிப்ளேமா சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர், பல்கலைக்கழக பீடாதிபதிகள், கல்வி சார், சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments: