News Just In

1/19/2025 02:50:00 PM

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா?அழையுங்கள் !

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா?, சுகாதார பிரச்சினைகளா? - சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள் !


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருதின் உணவு கையாளும் சில நிறுவனங்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன் அவர்களின் வழிகாட்டலில் இன்று சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம். நிஸ்தார் அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு சுகாதார சீர்கேடான உணவங்களுக்கு எச்சரிக்கையும், அறிவுறுத்தலும் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் தொடக்கம் அனுமதிப்பத்திரம், ஊழியர் வைத்திய சான்றிதழ் இல்லாத மற்றும் முறையான கழிவு நீர் தொட்டி இல்லாத , குளிர்சாதனப் பெட்டிகள் முறையாக பராமரிக்காத, தனிநபர் சுகாதாரம் பேணாத, உணவு தயாரிக்கும் இடங்களை சுகாதாரமாக பேணாத உணவகங்கள், பேக்கரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதுடன் மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை உரிய ஆதாரங்களுடன் 0753333453, 0776702703 , 0706702709 எனும் இலக்கங்களுக்கு அறியத்தருமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்

No comments: