தமிழ் மக்கள் ஒன்றிணையவில்லை என்றால் அனைத்தும் கை மீறிவிடும்! சி.அ.ஜோதிலிங்கம்
தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்றால் அனைத்து சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்று அபாயம் இருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி.அ.ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராயிலுள்ள தனது அலுவலகத்தில் இன்றையதினம்(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசு பல்வேறு வழிகளிலும் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களிடம் இருந்து அவர்களுக்கான அனைத்து விடயங்களையும் கையாண்டு மக்கள் மத்தியில் ஓர் அரசியல் மாற்றத்தை கொண்டு வருவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இது ஒரு ஆபத்தான நிலைமையாகும். இதனை தடுப்பதற்காக அனைத்து தமிழ்தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்று திரள வேண்டும்.
அத்துடன், இவ்வாறான ஆபத்தை தடுப்பதற்கு தமிழ் மக்களுக்களை வழிநடத்த அனைத்து சிவில் சமூகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.”என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: