News Just In

1/06/2025 11:34:00 AM

சமூக நலத் திட்டங்களை விஸ்தரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கு திட்ட முன்மொழிவுப் பயிற்சிகள்!

சமூக நலத் திட்டங்களை விஸ்தரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கு திட்ட முன்மொழிவுப் பயிற்சிகள்.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

சமூக நலத் திட்டங்களை விஸ்தரிப்பதற்காக இளைஞர் யுவதிகளுக்கு திட்டமுன்மொழிவுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாவட்ட மட்ட இளைஞர் அமைப்புக்களின் பிரதிதிகளுக்கு திட்ட முன் மொழிவுகளைத் தயாரிக்கும் இரு நாள் செயலமர்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார்.

அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தினால் அமுலாக்கம் செய்யப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு சைல்ட் பண்ட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்குகின்றது.

பயிற்சிச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து இளைஞர் யுவதிகள் மத்தியில் திட்டத்தைப் அறிமுகம் செய்த அனுலா, இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சமூக நலத் திட்டங்களை மாவட்டத்தின் வேறு பகுதிகளுக்கும் விஷ்தரிக்க வேண்டும் என்று அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்திற்கு நிதி அனுசரணை வழங்கும் சைல்ட்பண்ட் நிறுவனம் கருதுகிறது.

அதற்கேற்ப, காலநிலையை அடிப்படையாகக் கொண்ட சிசிஐஆர் திட்டத்திற்காக கிரான் பிரதேச செயலாளர் பிரிவு தெரிவு செய்யப்பட்டு அங்கு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன. அடுத்து வரும் திட்டம் முழுமையாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்ததாக அமையப்போகிறது.

அக்ஷன் யுனிற்றி லங்காவும் சைல்ட்பண்ட் நிறுவனமும் இளைஞர்களுடைய அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளில் அதிக அக்கறை எடுத்து ஆர்வம் காட்டி வருகின்றது. அதனடிப்படையில் சமூகப் பங்கேற்பு சமூகப் பங்களிப்பு ஆகியவற்றில் மாற்று முகவர்களாக இளைஞர் யுவதிகளை உருவாக்குவது முன்னுரிமை நோக்கமாக அமைகிறது.

ஏனென்றால், இளையோர் சமூகதாயத்தினரால் மட்டுமே சாதகமான சமூநல மாற்றங்களை துரித கதியில் கொண்டு வர முடியும். ஆகவே அதிக சாதக மாற்றங்களைக் கொண்டு வரும் மனித வளமாகவும் மனித வலுவாகலுவும் இளைஞர் யுவதிகள் கருதப்படுகிறார்கள்.

எனவே, அதனடிப்படையில் முதலில் இளைஞர்களால் ஏற்படும் மாற்றம் இiளுஞர்களின் ஆக்கபூர்வச் செயற்பாடுகளினால் உண்டாக்கப்படும் சாதகமான மாற்றம் என்பவை கருத்திற்கொள்ளப்படுகின்றன.

அதனடிப்படையில், இளைஞர் கழகங்களை ஸ்தாபிப்பதனைக் கொண்டு இந்த செயற்பாடுகளின் துவக்கம் ஆரம்பிக்கிறது. பங்குபெறும் இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு செயற்திட்டப் பயிற்சிகளை வழங்கி அவர்களை அறிவு, ஆற்றல், செயற்பாடு மிக்கவர்களாக மாற்றவுள்ளோம்” என்றார்.

No comments: