நூருல் ஹுதா உமர்
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுல் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிப்பவர்களுக்கான சுகாதார ஆலோசனை கருத்தரங்கு காரைதீவு சுகாதார வைத்திய அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டார்கள்.
இதன் போது உணவு பாதுகாப்பு தொடர்பான விளக்கங்களை பொது சுகாதார பரிசோதகர் எம்.எம். சப்னூஸ் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் உணவு கையாளுவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் கூட இதன்போது வழங்கப்பட்டது.
No comments: