News Just In

1/12/2025 06:10:00 PM

புலம்பெயர்ந்தோர் தினத்தின் இலங்கை அகதிகளுடன் இரா. சாணக்கியன் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்!



புலம்பெயர்ந்தோர் தினத்தின் இலங்கை அகதிகளுடன் இரா. சாணக்கியன் மற்றும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்




சென்னையில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தின் இறுதித் தினமான இன்றைய தினம் தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்காட்சியில் தமிழகத்தில் வாழும் புலம்பெயர் இலங்கை அகதிகளின் விற்பணையகங்களும் இடம்பெற்றிருந்தது. அவர்களின் தொழில்துறை ஊக்கமானது மிகுந்த மனமகிழ்வை உண்டாக்கியது. இவ் நிகழ்வில் பல காலமாக அகதிகளாக வாழும் எம்மவர்களை மற்றும் நீண்டகால நண்பர்களை சந்தித்ததுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த மு.க. ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததுடன் அவரே அவரது தொலைபேசியில் எம்மை செல்பி எடுத்துக் கொண்டார். இவ் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அ. அடைக்கலநாதன் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களும் என்னுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.

No comments: