யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர், மாவீரர்கள் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகள் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியுள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில், தனது முதலாவது நாடாளுமன்ற உரையின் போது இவ்வாறு அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து உரையை ஆரம்பித்துள்ளார்.
இதன்போது,“வரலாற்றை அர்ப்பணிப்பில் இருந்து ஆரம்பிக்க ஆசைப்படுகின்றேன்.. என் உயிரினும் மேலான என் மானம் காத்த ஈழத் தமிழன், இருந்தால் தலைவன், இல்லையேல் இறைவன் என்று போற்றப்படுகின்ற அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மேதகு அவர்களுக்கும், அவர் காட்டிய வழியில் உயிரை துச்சமென மதித்து என் இனத்தின் மானம் காத்த வீரமறவர்களுக்கும் எனது அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்துகின்றேன்..”
அத்துடன், “ரோஹன விஜேவீரவுக்கும் அவர் சார் தோழர்களுக்கும் எனது அஞ்சலிகளையும், வணக்கத்தையும் செலுத்தி எனது உரையை ஆரம்பிக்கின்றேன்” என தெரிவித்து தனது உரையை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: