
வடக்கிலும் கிழக்கிலும் 1,000 விகாரைகளை கட்டுவதற்கு தீர்மானித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கூறியதற்காக வடக்கு - கிழக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சஜித்துக்கு வாக்குகள் வழங்கப்பட்டது தமது கோரிக்கைகளின் நிமித்தமே என சுமந்திரன் மற்றும் சாணக்கியன் கூறுவது தொடர்பாக வினவப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“சஜித் பிரேமதாச ஏற்கனவே தமிழ் மக்களிடையே முன்னைய தேர்தலின் போது கணிசமான வாக்குகளைப் பெற்றவர். பல வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றார். அதனால் பலருடன் அவர் தொடர்பு வைத்திருக்கின்றார்.
அதைவிட, யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல தேர்தல் தொகுதிகளில் முதனிலை பெற்றவர் அரியநேத்திரன். அவர் சில தொகுதிகளில் இரண்டாவது நிலை பெற்ற போதும் மிகக் குறைவான வாக்குகளால் தான் இரண்டாவதாக வந்தார்.
எனவே, பெருவாரியான மக்கள் அவருக்கு மனமுவந்து வாக்களித்துள்ளார்கள். அத்துடன் முஸ்லிம்கள் பலர் சஜித்துக்கு வாக்களித்திருந்தார்கள்.
அவர்கள் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோரின் வேண்டுகோளை மதித்து அவ்வாறு வாக்களிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்
No comments: