News Just In

11/14/2025 06:05:00 PM

எந்த சந்தர்ப்பத்திலும் கருணா குழு ஆயுதங்களோடு களமிறங்கலாம்! தேரரின் பரபரப்புத் தகவல்

எந்த சந்தர்ப்பத்திலும் கருணா குழு ஆயுதங்களோடு களமிறங்கலாம்! தேரரின் பரபரப்புத் தகவல்



கிழக்கில் கருணா தலைமையிலான குழு எச்சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களுடன் போராட்டத்தில் குதிக்கலாம் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று கிழக்கில் கருணா மற்றும் பிள்ளையான், ஏனைய குழுக்கள் கௌரவமாக இருக்கின்றனர். ஆனால் அடியில் ஏதோ ஒரு திட்டம் தீட்டப்படுவதாகவே தோன்றுகிறது. வெளியில் தெரியாவிட்டாலும் கருணாவின் குழு இன்றும் இருக்கிறது.

ஆனால் ஆயுதங்கள் இப்போது இல்லாவிட்டாலும் எச்சந்தர்ப்பத்திலும் ஆயுதங்கள் எடுக்க கூடும் நான் அடித்து சொல்லுகிறேன். கருணாவே அதற்கு தலைமை தாங்குகிறார். அதனால் ஆயுதம் ஏந்துவதற்கான அவதானம் இருக்கிறது. ஆனால் அதற்கான அவதானிப்பு அரசாங்கத்திடம் இல்லை.

இந்த காரணங்களை கொண்டே அன்று நான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் சவால் விட்டேன். யுத்தம் முடிந்து விட்டால் அதில் பயன்படுத்திய பாரியளவான ஆயுதங்கள் எங்கே, யார் அவற்றை பறிமுதல் செய்தனர்? யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?

நான் 35 வருடங்களாக மட்டக்களப்பில் வசித்து வருகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திலும் இருந்தேன். எனக்குத் தெரியும் யார் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். யார் தலைவர்கள் அவர்களின் அனைத்து விபரங்களும் அறிவேன்.

கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோரின் குழுவினர் ஆயுதங்கள் ஒப்படைக்கப்படவில்லை. இன்று கருணா என்ன செய்கிறார்?எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது.

அது தான் பயங்கரமானது. இது தொடர்பில் அனைத்தும் எனக்கும் தெரியும். தேவையான இடத்திற்கு கொடுக்க முடியும். குழுவிலுள்ள அனைவரும் 45-50 வயதுக்குட்டபட்டவர்களாவர்.

கருணாவுடன் அன்று ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் சாமானிய வாழ்க்கைக்கு வந்திருந்தாலும், உள்ளாந்தமாக அவர்களுக்கு எமக்கு சான்றிதழ் வழங்க முடியாது. அப்படி நம்பவேண்டும் என்றால், போராட்டத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே என்று அவர்கள் கூறவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments: