News Just In

9/23/2024 06:52:00 PM

கல்முனை சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் புதிய ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி விஷேட பூசை

இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நல்லாசி வேண்டி கல்முனை சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் விஷேட பூசை


(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆட்சி சிறப்பாக அமைய வேண்டும் என நல்லாசி வேண்டி கல்முனை சர்வார்த்த சித்தி விநாயகர் ஆலயத்தில் சிவஸ்ரீ ச.கு.ரேவதீசன் குருக்கள் தலைமையில் விசேட பூசை இடம்பெற்றது.


பூசையில் தேசிய சமாதான அபிவிருத்தி மையத்தின் தலைவர் வீ.ரீ.சம்பந்தர் ஆலய நிர்வாகிகள்,புத்திஜீவிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: