News Just In

8/23/2024 05:26:00 PM

ஏறாவூருக்கு ஜனாதிபதி வெள்ளிக்கிழமை வருகை!



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

வெள்ளிக்கிழமை 23.08.2024 பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூருக்கு வருகை தரும் ஜனாதிபதி அங்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 ஆயிரம் ஆதரவாளர்கள் இக்கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான கூட்ட மைதான ஏற்பாடுகள் மும்முரமாக இரவு பகலாக நடந்த முடிந்துள்ளன.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்ஹ பிரதேச மக்களை விழித்து விசேட உiராயற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பௌஸி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமனற் உறுப்பினரும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அமைச்சருமான அலி ஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுத் தலைவரும் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், கிராமிய அவிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான், அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றஹ்மான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஸர்ரப், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸப்ரி றஹீம், முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

No comments: