நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பணியாற்றிய பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் பதவிக்காலம் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வெற்றிடத்தின் காரணமாக உபவேந்தர் அலுவலக கடமைகளை ஆற்றுவதற்காக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி, கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்ஆறாவது உபவேந்தரை நியமிப்பதற்கான நடைமுறைகள் இடம்பெற்று பல்கலைக்கழக பேரவையினால் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப் ஆகியோரது பெயர்கள் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்கியுள்ளதாலும் தேர்தல் சட்டங்களுக்கு அமைய, தேர்தலின் பின்னர் தெரிவு செய்யப்படும் புதிய ஜனாதிபதியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் நியமிக்கப்படுவற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அதுவரையும் உபவேந்தர் அலுவலக கடமைகளை ஆற்றுவதற்காக கலாநிதி மஜீதின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
No comments: