News Just In

9/14/2025 06:24:00 PM

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்ஞா.சிறிநேசன் விபத்தில் !

மட்டக்களப்புமாவட்டநாடாளுமன்றஉறுப்பினர்ஞா.சிறிநேசன் விபத்தில் வைத்தியசாலையில்....



மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் காயமடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனமும் காரும் மோதி இடம்பெற்ற விபத்திலேயே இவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டிக்கும் போது மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவு வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: