இளைஞர்கள் எவ்வாறு தங்களைத் தொழிலுக்குத் தயார் செய்து கொள்வது, மேலும் அறிவு, திறன், மனப்பாங்கு ரீதியாக எவ்வாறு முன்னேற்பாடு செய்ய வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கிய செயலமர்வு நடத்தப்பட்டு வருவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் இளைஞர்களுக்கான நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் அனுலா அன்டன் தெரிவித்தார்.
சைல்ட் பண்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்த, இளைஞர்களைத் தொழிலுக்குத் தயார்படுத்தும் நோக்கில் அமைந்த செயலமர்வு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரியில் இடம்பெற்றது.
இப்பயிற்சி நெறியில் சுமார் 50 இளைஞர் யுவதிகள் பங்கேற்றனர். இவ்வாறானதொரு அடுத்த செயலமர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்றும் மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரியில நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: