நூருல் ஹுதா உமர்
தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவத் துறையின் முன்னெடுப்பில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதி “தொழில்முனைவோர் தினம் – 2025” சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வின் கருப்பொருள் “புதுமையால் உயர்வடைவோம்: அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை வலுப்படுத்துவோம்" என்பதாகும்
நிகழ்வில் வணிகக் கண்காட்சி, தொழில்முனைவோர் கலந்துரையாடல் மற்றும் குழு விவாதங்கள், இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான வணிகத் திட்டப் போட்டி, பாடசாலைகளுக்கிடையிலான வினாடி வினா மற்றும் பட்டதாரி முன்னோடி மற்றும் பிராந்தியச் சிறப்புரிமை பாராட்டு விழா ஆகியவை இடம்பெற்றன.
நிகழ்வின் வரவேற்புரையை முகாமைத்துவத் துறைத் தலைவர் மற்றும் ‘Entrepreneurship Day – 2025’ ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா வழங்கினார். பின்னர், சிறப்புரையை முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா வழங்கினார். முதன்மை உரையை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் ஆற்றினார்.
தொழில் முனைவோர் கலந்துரையாடல் மற்றும் குழு விவாதம் – 1 கலாநிதி ஐ. ரைசல் தலைமையில் நடைபெற்றது. இதற்கிடையே வெளிப்புற வணிகக் கண்காட்சி அரங்குகள் பார்வைக்கு திறக்கப்பட்டன

பாடசாலைகளுக்கிடையிலான வினாடி வினா போட்டிகளும் நடைபெற்றது. பிற்பகலில் தொழில் முனைவோர் கலந்துரையாடல் மற்றும் குழு விவாதம் – 2 பேராசிரியர் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முகாமைத்துவத் துறை ஒருங்கிணைத்தது. இதில் பேராசிரியர் கலாநிதி சல்பியா உம்மா (ஒருங்கிணைப்பாளர்), கலாநிதி ஐ. ரைசல் (இணை ஒருங்கிணைப்பாளர்), மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளரும் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் வினாடி விடை போட்டியின் மாஸ்ட்டருமான எம்.எம். ஷிராஜ், வினாடி விடை போட்டி இணை ஒருங்கிணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். சிராஜி, வினாடி விடை போட்டி இணை ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளருமான எம்.வி. பாத்திமா சஞ்சீதா, பல்கலைக்கழக வணிக திட்ட முன்மொழிவு போட்டி ஒருங்கிணைப்பாளரும் விரிவுரையாளருமான எம். ஃபார்விஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஷரீப்டீன், நிகழ்வின் செயலாளரும் விரிவுரையாளருமான ஏ.ஆர். பாத்திமா தபாணி ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். அத்துடன் உதவி விரிவுரையாளர்களான ஹம்தானி மற்றும் நுப்லா ஆகியோரும் இணைந்திருந்தனர். மேலும் மாணவர் செயற்பாட்டு குழுவினர் மற்றும் முகாமைத்துவப் பீட மாணவர் சங்கத்தின் மதிப்புமிக்க பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது."
பேராசிரியர் கலாநிதி சல்பியா உம்மா தனது உரையில் இன்றைய நிகழ்வில் அனைவரையும் வரவேற்கும் போது, “நிகழ்வின் கருப்பொருள்: ‘புதுமையால் உயர்வடைவோம்: அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை வலுப்படுத்துவோம்’. இந்த ஆண்டு வணிகக் கண்காட்சியை மாணவர்களுடன் மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளோம்” என்றும், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வணிகப் போட்டியில் சிறந்த மூன்று அணிகள் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டதாகவும், மாணவர் வணிகக் கண்காட்சியின் மூலம் இளைய தலைமுறையின் புதுமை சிந்தனை ஊக்குவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கை அரசு கல்விக்காக பெரும் முதலீடு செய்கிறது. நாமும் நாட்டிற்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். அதற்கு வேலைவாய்ப்பைக் கேட்பதை விட, “நான் எந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறேன்? நான் என்ன மதிப்பை உருவாக்குகிறேன்?” என்பதே நமது சிந்தனை ஆக வேண்டும் என அவர் கூறினார்.
உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் உரையில் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உலக உழைப்புத்திறன் தினத்தை கொண்டாடுவதோடு, நவீன சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தன்னிலை முயற்சிகளை வாழ்த்தும் நாளாக இதை கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார். வணிகக் கண்காட்சி, வணிகத் திட்ட போட்டிகள், பாடசாலைகளுக்கிடையிலான வினாடி வினா போட்டிகள், முன்னணி தொழில்முனைவோரை பாராட்டுதல் மற்றும் குழுநிலை விவாதங்கள் போன்ற நிகழ்வுகள் உழைப்புத்திறன் வாழ்க்கையின் முக்கியக் குணம் என்பதை வெளிப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் தொழில் நிபுணர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு விஷேட வரவேற்பு அளிக்கப்பட்டது: இதில்
• பேராசிரியர் பி. நிஷாந்தா, கொழும்பு பல்கலைக்கழக Entrepreneurship துறை
• திரு ரவி நிஷாங்கர், தலைவர், தொழில்துறை மேம்பாட்டு நிலையம் (IDB)
• திரு ரகுலன் தர்மகுலசிங்கம், Founder, Palladian Global, Sri Lanka
• பேராசிரியர் எம். அப்துல் ஜமால், Puducherry பல்கலைக்கழகம், பொருளாதாரத் துறை
• யாஸ்மின் சுல்தானா, Associate Professor, Puducherry பல்கலைக்கழகம்
மற்றும் இந்திய ஹைதராபாத்த்தின் முன்னாள் பேராசிரியரும் துறைத் தலைவரும் (CPME),தேசிய கிராமப்புற மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனம் (இந்திய அரசு) மான Shankar Chatterjee,
நிகழ்வு நேரத்தில் குழுநிலை விவாதங்களில் பங்கேற்ற வளவாளர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் பாடசாலைகளுக்கிடையேயான போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா தனது உரையில்; இவ்வாறான நிகழ்வுகள் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெறுவதை பெருமையாக கூறியுள்ளார். குறிப்பாக, வணிக முயற்சி (Entrepreneurship) தொடர்பான நிகழ்வு இது முதன்முறையாக நடைபெறுவதால் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்நிகழ்வு மூலம் பாடசாலை மாணவர்களையும் வியாபார முயற்சியாளர்களையும் ஒன்றிணைத்து, முகாமைத்துவ வர்த்தக பீடம் (Business Incubation Centre) கல்வி, ஆராய்ச்சி மட்டுமல்லாமல், பகுதி வியாபாரிகளை ஊக்குவித்து வளர்த்துவருவதை வெளிப்படுத்தியுள்ளது.
நிகழ்வின்போது பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.எம். பாஸில், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், பதிவாளர் எம்.ஐ. நௌபர், நூலகர் எம்.எம்.றிபாவுடீன், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில் முனைவோர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆர்வலர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் என பலரும் இதில் பங்கு கொண்டனர். இதன் மூலம், அடுத்த தலைமுறை தொழில்முனைவோரை வலுப்படுத்துவதில் பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது என தெரிவிக்கப்பட்டது

No comments: