News Just In

9/10/2025 03:49:00 PM

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக ஐ.எல்.எம்.றிபாஸ்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக ஐ.எல்.எம்.றிபாஸ் பொறுப்பேற்றார்.


நூருல் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்தவைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக அம்பாரை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் பதில் கடமை அடிப்படையில் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய அவர் இன்று (10) புதன் கிழமை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் ஏ.ஆர்.எம். ஹாரீஸிடமிருந்து தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக நீண்ட காலம் பணிபுரிந்த வைத்தியர் ஏ.எல்.எம்.எப். ரஹ்மான் ஓய்வு பெற்றதையடுத்து வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

இதன் போது கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதிய பரிபாலகர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதானிகள், சிவில் அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: