News Just In

7/11/2024 05:09:00 AM

திருகோணமலையில் அதிசொகுசு பேருந்து விபத்து!




திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 96 ஆம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து நேற்றிரவு திருகோணமலை நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.



குறித்த சம்பவம் நேற்று  அதிகாலை இடம்பெற்றுள்ளது. தனியாருக்கு சொந்தமான அதிசொகுசு பேருந்து ஒன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பேருந்து விபத்தில் சாரதி, நடத்துனர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து தொடர்பாக தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: