News Just In

6/11/2024 06:40:00 AM

மீண்டும் உச்சமடையும் மரக்கறிகளின் விலை!




மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கெப்பட்டிபொல விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வெலிமடை மற்றும் ஊவா,பரணகம உள்ளிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட மரக்கறி செய்கைக்கு கடந்த காலங்களில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டது.

கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தில்இதனால் மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இதற்கமைய கெப்பட்டிப்பொல பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ போஞ்சி 400 – 450 ரூபாவிற்கு விற்பனையாகிறது. கோவா ஒரு கிலோ 500 – 800 ரூபாவிற்கும் லீக்ஸ் ஒரு கிலோ 400 – 450 ரூபாவிற்கும் பீட்ரூட் ஒரு கிலோ 280 – 320 ரூபாவிற்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 250 – 300 ரூபாவிற்கும் கெரட் ஒரு கிலோ 280 – 300 ரூபாவிற்கும் தக்காளி ஒரு கிலோ 300 – 320 ரூபாவிற்கும் விற்பனையாகிறது.

No comments: