News Just In

6/25/2024 12:41:00 PM

வரலாற்று வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது ஆப்கானிஸ்தான்!




நடப்பு உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

எனினும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக போட்டி அமைந்திருந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரகமதுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரிஷாட் ஹொசைன் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை, போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் 114 என்ற வெற்றி இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் வெற்றியிலக்கான 114 ஓட்டங்களை நோக்கி பதிலெலுத்தாடிய பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளன.

அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: