News Just In

5/10/2024 01:43:00 PM

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவர் கைது!




ரஷ்ய இராணுவத்தில் வேலைக்காக இலங்கையர்களை கடத்தியதாக கூறப்படும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மற்றும் சார்ஜன்ட் ஒருவரையும் குற்றப் புலனாய்வு திணைக்களம் குருநாகல், வெவரும பிரதேசத்தில் கைது செய்துள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவ தலைமையகத்தில் இருந்து ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளின் பட்டியலை எடுத்துச் சென்றது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலிப்படை முகாம்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் கடத்தப்படுவது குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments: