News Just In

5/10/2024 06:29:00 PM

பெற்றோரினால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : மருத்துவர்கள் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!




பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் பட்டரி மூலம் இயக்கப்படும் பொம்மைகளுடன் ஒரு ஆபத்தை வீட்டிற்கு கொண்டு வருகிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவரும், அரச வைத்தியர் சங்கத்தின் உதவிச் செயலாளருமான மருத்துவர் பாலித ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

பேட்டரியில் இயங்கும் பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஒக்சைட் மற்றும் அல்கலைன் பட்டன் பேட்டரிகள் உள்ளன.

வீட்டில் இருக்கும் இதுபோன்ற பழைய பேட்டரிகள் சில சமயங்களில் பெரியவர்களுக்கு தெரியாமல் குழந்தைகளால் விழுங்கப்படலாம், காது அல்லது மூக்கில் போட்டுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது.

குழந்தைகளால் விழுங்கப்பட்டால், இந்த பேட்டரி அதன் மின்வேதியியல் செயல்பாட்டின் மூலம் ஆபத்தானது.

உணவுக்குழாய் முதல் பகுதி இயற்கையாகவே குறுகலாக இருப்பதால், இவை விழுங்கும் போது அதிக சேதத்தை ஏற்படுத்தும், மேலும் விழுங்கப்பட்ட பேட்டரி வயிறு வரை சென்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

அதற்கமைய. உணவுக்குழாய் துளையிடும் போது குரல்வளை மற்றும் முக்கிய இரத்த நாளங்களில் துளையிடலாம். இது தவிர, வயிற்றிற்கு கூட ஆபத்தான சேதத்தை ஏற்படுத்தும்.

மேலும் மூச்சுக்குழாய் அடைப்பு உயிருக்கு ஆபத்தானது. ஒரு குழந்தை இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை எதிர்கொண்டால், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அதுவரை குழந்தைக்கு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை 2 டீஸ்பூன் சுத்தமான தேனைக் கொடுப்பதுதான் முதலுதவியாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: