News Just In

4/10/2024 11:04:00 AM

யாழில் இளம் தாயின் மரணத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் சாணக்கியனின் பயிற்சி முகாமில்!





“அரசியலில் அனைத்தும் சகஜம்” என்ற ஒரு வார்த்தை உண்டு.. கொடுக்கும் வாக்குறுதிகளையும், கடமைகளையும் மறந்து, புறக்கணித்து செயற்படும் எம் மக்கள் பிரதிநிதிகள் மேற்சொன்ன வார்த்தையை தெய்வ வாக்காக கொண்டு செயற்படுவர்.

இது எம் நாட்டில் மட்டுமல்ல எமது அண்டைய நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் இதுதான் நடைமுறை.

குறிப்பாக, இது போன்ற பல அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் பாரிய சர்ச்சைகளை தோற்றுவிப்பதும் வழமையான ஒன்று தான்.

இந்த நிலையில் அடிக்கடி சர்ச்சைகளுக்கு உள்ளாகி, பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்துவருகின்ற தமிழரசுக் கட்சி மறுபடியும் ஒரு விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் அனுசரணையுடன் இயங்கும் International Republican Institute (IRI) நிறுவனத்தினால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு தம்புள்ள தனியார் விருந்தினர் விடுதியில் வழங்கப்பட்ட வதிவிட பயிற்சி முகாம் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்துதான் தற்பொழுது சர்ச்சை எழுந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்ற அந்த பயிற்சி முகாமில், வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தன் என்பவர் கலந்துகொண்டதைத் தொடர்ந்தே, இந்த விடயம் தற்பொழுது சர்ச்சையாகிவருகின்றது.

கடந்த 16.04.2023 அன்று, வலி வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் சுகிர்தனின் வீட்டின் முன்பாக விஜித்தா என்ற ஒரு இளம் தாய் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தைத் தொடர்ந்து, கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகிக்கொள்ளவேண்டும் என்று தலைவர் மாவை சேனாதிராஜாவினால், பதில் பொதுச் செயலாளருக்கு பணிக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் சுகிர்தராஜன் எவ்வாறு கட்சி சார்ந்த அந்த வதிவிட பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள்.

விஜிதா என்ற 39 வயது குடும்பப் பெண், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டு வளவுக்குள் தனக்குத் தானே தீமூட்டிக் கொண்டதுடன் பின்னர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் கடந்த வருடம் மிகப் பெரிய பேசுபொருளாகியிருந்தது.

No comments: