News Just In

3/14/2024 08:43:00 PM

பெரிய நீலாவணையில் இரு பிள்ளைகளுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்!




அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை ஒருவர் தவறான முடிவெடுக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவமானது இன்று(14.03.2024) காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் தனது மனவளர்ச்சி குன்றிய இரு பிள்ளைகளை கொன்று தவறான முடிவெடுக்க முயற்சித்த தந்தையும் காயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் முஹம்மது மிர்சா முகமது கலீல் (வயது-63) தற்போது காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ்(வயது-29) முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா(வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பிள்ளைகளின் தாய் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: