News Just In

3/05/2024 10:34:00 AM

கல்முனை ஸாஹிராவில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!



(சர்ஜுன் லாபீர்)

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் 2024ம் ஆண்டுக்கான தரம் 06ற்கு புதிய மாணவர்களை பாடசாலைக்கு வரவேற்கும் நிகழ்வு இன்று(05) பாடசாலையின் தரம் 6,7 பகுதித் தலைவர் ஏ.எஸ்.ஏ.சிராஜ் தலைமையில் கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம் ஜாபீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு கெளரவ அதிதிகளாக கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் மெளலவி ஏ.எல்.எம் முர்ஷீத்(முப்தி),கல்லூரியின் பிரதி அதிபர்களான யூ.எல்.எஸ் ஹமீட், ஏ.எச்.எம் அமீன்,ஏ.எல்.எம் தன்சீல்,உதவிஅதிபர்களான எஸ்.முபாரக்,ஏ.எம் பறூஸ்,எம்.ஜெமில்,பாடசாலை அபிவிருத்திக் குழு உப செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம் ரியாஸ்,பிரதி பகுதித் தலைவர் ஏ.எச்.எம் அர்சாத் உட்பட இன்னும் பல அதிதிகள்,பாடசாலை ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் இருந்து மொத்தமாக 250 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். அதில் தமிழ் மொழி மூலமான கற்கைக்கு 160 மாணவர்களும்,ஆங்கில மொழி மூலமான கற்கைக்கு 90 மாணவர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.




No comments: