News Just In

2/21/2024 02:14:00 PM

ஏறாவூரில் கல்வி எழுச்சி ஊர்வலம்!



(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)

கல்வி அமைச்சின் வழிகாட்டுதலில் ஏறாவூரில் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கபிரதிநிதிகள் ,பெற்றோர் என பலர் கலந்து கொண்ட கல்வி எழுச்சி நிகழ்வொன்று இன்றுநடைபெற்றது

இதற்கமையமட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்குட்பட்ட ஏறாவூர்பதியுதீன் மஹ்மூத்வித்யாலயத்தில் ஆறாம் ஆண்டுக்கு கல்வித் தரஉயர்வு பெற்ற மாணவர்களைஏறாவூர் ரஹ்மானியா மகா வித்தியாலயத்தில் உள்ளீர்ப்பு செய்யும் விசேட நிகழ்வு இன்று வைபவ ரீதியாக நடைபெற்றது.

ஏறாவூர்ரஹ்மானியா மகா வித்தியாலயத்தின் அதிபர் டி. எம் .உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரிகளின் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

புதியமா ஆறாம் ஆண்டு மாணவர்களை உள்ளிருக்கும் விசேட நிகழ்வை முன்னிட்டு மாணவர்களின் ஆரம்ப பாடசாலை என ஏராவூர் பதியுதீன் முகமது வித்யாலயத்திலிருந்து ரகுமானியா மகா வித்தியாலயம் வரை விசேட கல்வி எழுச்சி ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் இறுதியில் விசேட கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதன் பின்னர் புதிய ஆறாம் ஆண்டுக்கு கல்வி போதனைக்கு உள்ரீர்ப்பு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாடசாலையின் பௌதிக வழங்கல் மற்றும் ஆய்வூடங்கள் வகுப்பறைகள்,கணனி அறைகளின் செயல்பாடுகள் காண்பிக்கப் பட்டு புதிய மாணவர்களை வகுப்பறைக்கு உள்ளீர்ப்பு செய்யும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

No comments: