News Just In

12/01/2023 06:21:00 PM

(O/L)பெறுபேற்றில் சாதனை படைத்த மட்டக்களப்பு வின்சன் மகளிர் தேசிய பாடசாலை!



கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (01.12.2023) வெளியிடப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தின் வின்சன் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்

பாடசாலை வரலாற்றில் இது ஒரு சாதனை என்பதோடு இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 99 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய 176 மாணவர்களில் 
56 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் 
19 மாணவர்கள் 8 பாடங்களில் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
17 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ சித்திகளையும், 2 பி சித்திகளையும் பெற்று உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சமூகம் தந்து பாடசாலை சமூகத்திடமிருந்து தமது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர்.பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: