News Just In

12/13/2023 06:21:00 AM

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு விளக்கமறியல்!


போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த மாணவனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(12) யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ கூட பிரதேசத்தில் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நடமாடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மாணவனை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது நீதவான் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவன் ஏற்கனவே திருநெல்வேலிப் பகுதியில் முன்னரே போதைப்பொருள் பயன்படுத்தியதாக கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments: