
பிரபல தென்னிந்தியத் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ‘கில்மிஷா‘ வெற்றிவாகை சூடியுள்ளார்.
நேற்றைய தினம் சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கில்மிஷாவுக்கு பலரும் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கில்மிஷாவின் வெற்றியை அவரது ஊரான அரியாலையைச் சேர்ந்த மக்கள் கொண்டாடி வருகின்றனர்.எல்லோரும் எதிர்பார்த்தது போல இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார்.
ஒரு இலங்கை பெண் இங்கு வந்து டைட்டில் வெல்வது வரலாறு என மேடையில் இருந்த நடுவர்கள் கூறினார்கள்.கில்மிஷாவுக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
No comments: