News Just In

12/18/2023 12:55:00 PM

நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி முடிவு? எம்.ஏ.சுமந்திரன்




ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவாறோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(17) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் தொகுதிக்கிளை கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்“ வலது பக்கம் சிக்னலைபோட்டுவிட்டு இடது பக்கம் வாகனத்தை செலுத்துபவர் தான் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அவர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்போகின்றேன் என்று கூறும் போதே சந்தேகம் ஏற்படுகின்றது.

ஒருவேளைஅதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைத்துவிடுகின்றாறோ என்று கூட தோன்றுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளா

No comments: