News Just In

12/13/2023 08:09:00 PM

மட்டக்களப்பில் குற்றவாளிகளுக்கு புனர்வாழ்வு!




மட்டக்களப்பில் சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களை சீர்திருத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் நேற்றைய தினம் விற்பனை நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த காரியாலயம் மட்டு மாநகரசபையின் அனுசரனையுடன் நீதிமன்றத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த விற்பனை நிலையமானது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போலினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்கப்பு பிராந்திய சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முகம்மட் ஸப்றீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் மற்றும் சமுதாய சீர்திருத்த வேலைப்பரிசோதகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மாநகர ஆணையாளர் நீதவான் நீதிமன்ற பதிவாளர் மட்டக்களப்பு சிறுவர் நன்நடத்தை நிலையப்பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: