உலகத்தமிழர் பேரவை அங்கத்தவர்களை, தடை நீக்கம் செய்து, அழைத்து ஜனாதிபதி ரணில் பேசுவது நல்லதே. அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் உள்நாட்டில் தமிழருக்கு தொடர்ந்து தவறான சமிக்ஞைகளை தருகிறார். இதில் ஒன்று, மக்களுடன் எந்தவித நேரடி தொடர்புகளும் இல்லாத அமைச்சர் டிரான் அலசின் பேச்சை கேட்டு, எனது தொகுதி கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவுகளை ஆரம்பித்துள்ளமை ஆகும்.
இரண்டாவது, வடக்கு கிழக்கிலாவாது மாகாணசபை தேர்தல்களை நடத்தி அங்கே மாகாணசபைகளை ஏற்படுத்த ரணில் தயாரில்லை என்பதாகும். மூன்றாவது, பாதிட்டில் ரணில் உறுதியளித்த, மலைநாட்டில் 10 பேர்ச் காணி வழங்கல் பொறுப்பையும், அதற்கு ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் 400 கோடி ரூபாவையும் இப்போது யார் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாமையாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்
No comments: