News Just In

12/14/2023 03:46:00 PM

வவுனியாவில் மாணவியைத் தாக்கிய ஆசிரியர் கைது!



வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயர்தரம் கற்கும் மாணவியொருவர் ஆண் ஆசிரியரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இச்சம்பவத்தினையடுத்து மனஉலைச்சலுக்கு உள்ளான மாணவி தனது உயிரை மாய்க்க முயற்சி செய்திருந்த நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் குறித்த ஆசிரியரைக் கைதுசெய்த வவுனியா-ஈச்சம் குளம் பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments: