
ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குறிப்பிடப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து ஒருவர் தலா ஐந்து இலட்சம் வீதம் மொத்தமாக இருபது இலட்சம் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் 2011 ஆம் ஆண்டு மனுதாரர் டபிள்யூ.ரஞ்சித் சுமங்கலவை சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து, அவரை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் அஜித் வனசுந்தர என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: