News Just In

11/22/2023 08:09:00 PM

சிங்கள ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறிய தமிழ் பெண் - குவியும் பாராட்டுக்கள்





இலங்கைக்கு பெருமை சேர்த்த தமிழ் பெண் தொடர்பில் தென்னிலங்கையின் சிங்கள ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக அதனை வெளியிட்டுள்ளன.

வயதான காலத்தில் அபார திறமையை வெளிப்படுத்திய பெண்ணுக்கு சிங்கள மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் இளையோர் மற்றும் முதியோருக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 71 வயது பெண் இரண்டு தங்கம் உட்பட மூன்று பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த 71 வயதான திருமதி அகிலத்திருநாயகியை சிங்கள மக்கள் புகழ்ந்துள்ளனர்.

அத்துடன் அரசியல்வாதிகள் மீது கடும் கோபத்தை வெளியிடும் வகையில் சிங்கள மக்கள் பதிவிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் இவரை போன்று திறமையான இளைஞர், யுவதிகள் பலர் உள்ளனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.

இரண்டு செருப்பு கூட இல்லாமல் ஓடும் இவரை யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் அவர் செருப்பு இல்லாமல் ஓடி பெற்ற தங்கம் மட்டும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரியும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் இருக்கிறார். அனுசரனையாளர்கள் உள்ளனர். ஆனால் வெற்றி பெற்றவர் நாடு திரும்பும் போது செல்பி எடுப்பதற்காக மட்டுமே அவர்கள் வருவார்கள்.

குடும்பத்துடன் சவாரி செல்லும் அரசியல்வாதிகள் உள்ள நாட்டில் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை என ஒருவர் கூறியுள்ளார்.

இந்த பெண் மதிப்புமிக்க பொக்கிஷம். அவர் பதக்கம் வெல்லும் போதுதான் ஒவ்வொருவரும் அவரை வைத்து விளம்பரம் தேடுவார்கள். இந்த நிலைமை மிகவும் பரிதாபகரமானது என மேலும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வயதிலும் இலங்கைக்கு பெருமை சேர்ந்த அவருக்கு வாழ்த்துக்கள் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.


இதேவேளை, தங்க பதக்கங்களை வென்ற திருமதி அகிலத்திருநாயகிக்கு வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

No comments: