News Just In

11/22/2023 08:15:00 PM

பரதநாட்டியம் குறித்து மெளலவியின் கருத்துக்கு : இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் !



மெளலவி ஒருவரினால் பரதநாட்டியம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து மிகுந்த கவலையளிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதங்கள் மற்றும் கலாசார விடயங்கள் நிந்திக்கபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே இதனை வன்மையாகக்கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து இந்து மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு நாம் எமது கவலையையும், கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இதேவேளை தவறை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுத்துள்ள உலமா சபைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இதுபோன்ற தவறுகள் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரிய வழிகாட்டுதல்களை முன்னெடுக்க வேண்டும் என உலமா சபையிடம் இந்து அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

No comments: