
நீரோடை மூலம் தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜா-எல பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஜா-எல பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொலிஸ் உத்தியோகத்தர் குழு ஒன்று சென்ற போது, குறித்த சந்தேகநபர் நீரோடையில் குதித்து தப்பிச் செல்ல முற்பட்டதாகவும், அவரை பிடிக்க 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் நீரோடையில் குதித்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 26 வயதுடைய சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தராவார்.
இந்நிலையில், தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர் மீண்டும் ஜா -எல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments: