
முல்லைத்தீவு பகுதியில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், முல்லைத்தீவு - புதுக் குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் நேற்று (22.11.2023) பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த பெண் அவரது மகன் மற்றும் பேரக் குழந்தை ஆகியோருடன் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது பாரதிபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்து ஓடி வந்த இரு பொலிஸார் அவர்களை மறித்துள்ளனர்.
இதன்போது மறித்த இடத்திலிருந்து 20 மீற்றர் தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால், மறித்த இடத்தில் சைக்கிளை நிறுத்த முடியாதா? என கேட்டு மகனையும் பின்னால் இருந்த தாயான பெண்ணையும் பொலிஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தாய் உடனடியாக தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார், காயமடைந்த பெண், அவரது மகன், பேரக்குழந்தை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அவ்வாறே விட்டு அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார், காயமடைந்த பெண், அவரது மகன், பேரக்குழந்தை மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அவ்வாறே விட்டு அங்கிருந்து உடனடியாக சென்றுள்ளனர்.
No comments: