News Just In

10/05/2023 07:37:00 AM

104 வயதில் உலக சாதனை படைத்த மூதாட்டி!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 104 வயது மூதாட்டி ஒருவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை சேர்ந்தவர் 104 வயதான டொரோத்தி ஹாஃப்னர்என்ற மூதாட்டியே இந்த சாதனையை செய்துள்ளார்.

இவருக்கு ஸ்கை டைவிங் செய்வதில் நீண்ட நாட்களாகவே ஆர்வம் இருந்து வந்ததாகவும், இதற்காக முறையான பயிற்சியும் பெற்று வந்ததாகவும் கூறியுள்ளார்.

அதிகபட்ச உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என டொரோத்தி ஹாஃப்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 மே மாதம் ஸ்வீடனைச் சேர்ந்த 103 வயது லினியா இங்கேகார்ட் லாசன் என்பவர் ஸ்கை டைவிங் செய்து, உலகின் மிகவும் வயதான ஸ்கை டைவர் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

இதனை முறியடிக்க விரும்பிய டொரோத்தி, சிகாகோவில் சுமார் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்துள்ளார்.

No comments: