News Just In

8/11/2023 03:39:00 PM

கொழும்பில் விசா வழங்கும் விநாயகர்! படையெடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!



கொழும்பு - வெள்ளவத்தையில் அமைந்துள்ள விசா விநாயகர் ஆலயத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா?

வெளிநாடு செல்ல காத்திருக்கும் பலர் கடவுச்சீட்டினை கொண்டு வந்து இந்த விநாயகர் ஆலயத்தில் வைத்து வழிபட்டு நேர்த்தி வைத்துள்ள நிலையில் அவர்கள் நினைத்த காரியம் நினைவேறியுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

வெளிநாடு செல்வது மாத்திரமல்லாமல், வழக்குகள், குழந்தைபேறு மற்றும் திருமணம் உள்ளிட்ட காரியங்களிலும் அநுகூலமான வழியை இந்த விசா விநாயகர் காட்டுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக விசா விநாயகரின் அருளால் வெளிநாடு சென்றதாக நம்பும் புலம்பெயர் தமிழர்கள் பலரும் இந்த ஆலயத்திற்கு படையெடுத்து வருவதுடன், தொடர் வழிபாடுகளிலும் கலந்து கொள்கின்றனர்.

எனினும் இந்த ஆலய பூஜைகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது சகோதர மொழி இனத்தவர்கள் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

No comments: