
Sundralingam Pradeep
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட மாநாடு இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் லால் காந்த, அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சேவை சங்கத்தின் செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் மாநாடு நடைபெற்றது.
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்தல்,EPF/EPF கொள்ளை, அநீதியான முறையில் தொழிலாளர் சட்டத்தை மாற்றி அமைத்தல், வரிச் சுமை, அடக்குமுறை, தேர்தலை நடத்தாமல் பிற்போடுதல் போன்றவற்றிற்கு எதிராக அரச மற்றும் தனியார், பெரும் தோட்டத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இம்மாநாடு நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளிகளாக மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் பூர்த்தி ஆகுகின்றன இந்நிகழ்வை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றனர் இது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல நினைவு கூரப்பட வேண்டியது 200 வருட அடிமை வாழ்வில் இருந்து மலையக மக்கள் முழுமையாக மீட்சி பெறவில்லை கல்வி, சுகாதாரம் ,காணி உரிமை, பொருளாதாரம், என்பவற்றில் முழுமையான உரிமை மக்களுக்கு வழங்கப்படவில்லை ஆனால் 75 வருட ஆட்சியில் எல்லா அரசாங்கங்களோடு மலையக கட்சிகள் கூட்டு சேர்ந்து மக்களை ஏமாற்றினார்களே அன்றி அவர்களின் சுபிட்சமான வாழ்விற்காக எவ்விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை இனியும் இவர்களை நம்பி மக்கள் ஏமாறாமல் தமக்கான ஒரு அரசியல் பாதையை தெரிவு செய்து அடிமைத்தனத்தில் விடுதலை பெற்று தேசிய நீரோட்டத்தில் கலந்து உரிமை பெற்ற மக்களினமாக தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக ஓரணியில் ஒன்று திரண்டு போராட முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்நிகழ்வில் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் அரச தனியார் ஊழியர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
No comments: