நூருல் ஹுதா உமர்
12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் பல முன்னனிப் பாடசாலைகளைப் புறம் தள்ளி மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய தரம் 6 வகுப்பு மாணவி பாத்திமா சுல்பா முதலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இப்பாடசாலையிலிருந்து வரலாற்றில் முதல்தடவையாக மாகாண விளையாட்டுப்போட்டிக்கு தகுதிபெற்ற மாணவி சுல்பாவை பாராட்டுவதோடு இம் மாணவியைப் பயிற்றுவித்த பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.எம். இர்சாத் அவர்களுக்கு விசேட நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பதோடு போட்டிக்கு மாணவர்களை அழைத்துச் சென்று தகுந்த ஆலோசனை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.சி.எம் இப்ஹாம் ஆசிரியை எம்.ஏ.ஆர்.எப்.சியானா ஆகியோர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.ஐ.அஸ்மி உட்பட பாடசாலை சமூகம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.
No comments: