News Just In

7/28/2023 10:01:00 AM

அதிகாரிகள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் தெரியாது விடின் அன்றைய தினம் மாலையாவதற்குள் எழுத்து மூலம் பதில் அனுப்ப வேண்டும்

அதிகாரிகள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் தெரியாது விடின் அன்றைய தினம் மாலையாவதற்குள் எழுத்து மூலம் பதில் அனுப்ப வேண்டும்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கண்டிப்பான உத்தரவு


- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரச அதிகாரிகள் உடனடியாக துல்லியமான பதில் வழங்க முடியாவிட்டால், அன்றைய தினம் மாலையாவதற்குள் எழுத்து மூலம் பதில் அனுப்ப வேண்டும் என்று அரச அதிகாரிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை வழங்கினார்.

மேலும் அரச அதிகாரிகளின் கண்ணியத்தைக் காக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றும் அரச அதிகாரிகள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் எச்சரித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் செவ்வாய்க்கிழமை 25.07.2023 இடம்பெற்றது.

அங்கு மாவட்டத்தின் அபிவிருத்திகள் பற்றிய விடயங்களையும் நிகழ்ச்சி நிரலில் இல்லாத இன்னோரன்ன விடயங்களையும் ஆராயும்போதே ஆளுநர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

கூட்டத்தின்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் சுற்றாடல் அமைச்சரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக குழவின் இணைத் தலைவருமான நஸீர் அஹமட் கேட்ட நிருவாக விடயங்கள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர்கள் தடுமாறியதைத் தொடர்ந்து அதிகாரிகள் பதிலளிக்காத இந்த விவகாரம் சூடு பிடித்தது.

இந்த நிலையில், அமைச்சர் நஸீர் அஹ்மத் தற்போது காத்தான்குடி கல்வி அதிகாரியை அம்பாறை மாவட்டத்திற்கு இடம்மாற்றியது மற்றும் கடந்த காலத்தில் தான் கிழக்கு முதலமைச்சாரக இருக்கும்போது ஏறாவூர் நகர சபைக்கு கொள்வனவு செய்து கொடுத்து ஏறாவூர் மக்களின் வரிப்பணத்தில் பராமரிக்கப்படும் வாகனத்தை எவ்வாறு தற்போதைய ஆளுநர், ஆளுநர் அலுவலகத்துக்காகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பினார்.

No comments: